HomeCinemaஜவ்வாது மலையில் திரியும் சூனியக்கார ஆவிகளை பதிவு செய்யும் யூடியூபர்கள் 7 பேர்! -மர்மர்...

ஜவ்வாது மலையில் திரியும் சூனியக்கார ஆவிகளை பதிவு செய்யும் யூடியூபர்கள் 7 பேர்! -மர்மர் பட விழாவில் படத்தின் கதையை விரிவாக எடுத்துச் சொன்ன இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

Published on

ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ள மர்மர் தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் சாதனை படைக்கவிருக்கிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், “மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதை பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும். அதை படமாக காண்பிக்கும் போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.

அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித்திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல் துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர். அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்” என்றார்.”

மர்மர் பட விநியோகஸ்தர் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன், ”இயக்குநர் இந்தப் படத்தின் கதையை சொன்ன பிறகு டிரெய்லரை காண்பித்தார்.பார்த்தேன். அதன்பிறகு படத்தை போட்டு காண்பிப்பதாக கூறினார். தமிழில் ஒரு படம் முழுக்க ஃபவுண்ட் ஃபூட்டேஜ் மற்றும் மோஷன் சிக்னஸ் உள்ள முதல் படம் இதுதான்.

நடிகர் அஜித் குமார் ஓட்டிய காரின் கேபின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். அது கார் எங்கெங்கு செல்கிறது என்பதை நமக்கு காட்டும். உண்மையில், அந்த கார் சென்ற வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர்கள் ஆகும். இத்தகைய கேமரா ரேசிங் பற்றிய அனுபவத்தை 100 சதவீதம் கொடுக்கும். மற்றொரு உதாரணம், 1260 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் கண்ணாடியில் நடக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்கள். துபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் இதேபோல் 760 அடி உயரத்தில் கண்ணாடியில் நடக்க முடியும். அப்படி அங்கு நடக்கும் போது மோஷன் சிக்னஸ் ஏற்படும். அந்த மாதிரியான அனுபவங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது. இந்தப் படத்தின் மிகமுக்கிய ஜானர் அதுதான்” என்றார்.

 

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...