HomeCinemaமாடலிங்  பக்கம் போகவில்லை; நடிப்பில் முன் அனுபவம் இல்லை; கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக மாறிய...

மாடலிங்  பக்கம் போகவில்லை; நடிப்பில் முன் அனுபவம் இல்லை; கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக மாறிய மேகா ஷெட்டி!

Published on

சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியிருக்கிறார் மேகா ஷெட்டி. அவரது பயணம் சாதாரணமானது இல்லை. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே அவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தி.

மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.

நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘டிரிபிள் ரைடிங்’, ‘தில்பசந்த்’ மற்றும் ‘கைவா’ ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான ‘ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் ‘கிராமாயணா’ மற்றும் ‘சீட்டா’ படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கன்னட சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் மேகா. இந்தப் படங்களில் அவர் தனது நடிப்புத் திறனை மட்டுமல்லாமல் நடனத் திறமையையும் வெளிப்படுத்த இருக்கிறார். தென்னிந்திய சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்கும் பொருட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார் மேகா.

தனது நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறார் மேகா. சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே தானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறார் மேகா.

“ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.

திறமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தொழில்துறையில் வளர்ந்து வரும் நற்பெயருடன், மேகா ஷெட்டி தென்னிந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நட்சத்திரமாக உயர்வார் என உறுதியாக நம்பலாம்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this