HomeCinemaமைனா சேது நடிப்பில் உருவான மையல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் மலையாள நடிகை...

மைனா சேது நடிப்பில் உருவான மையல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் மலையாள நடிகை சம்ரிதி தாரா!

Published on

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நல்ல கதையம்சமுள்ள படங்கள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடைந்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இணையும் படைப்பாக ‘மையல்’ என்ற படம் உருவாகியுள்ளது.

மைனா படத்தில்  ‘பாஸ்கர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற சேது, முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்த படத்தில் கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் காட்சிகள் முழுவதும் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. மொத்த படப்பிடிப்பும் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஏபிஜி ஏழுமலையிடம் கேட்டபோது, ”ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. அப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம்” என்றார்.

படக்குழு:-

தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி ஆர் வேணுகோபால், அனுபமா விக்ரம் சிங்
கதை, திரைக்கதை, வசனம்: ஜெய மோகன்
இயக்கம்: ஏபிஜி ஏழுமலை
இசை: அமர்கீத்
ஒளிப்பதிவு: பாலா பழனியப்பன்
எடிட்டிங்: பாலா சண்முகம்
பாடல் வரிகள்: விவேகா, ஏகாதசி, கருணாகரன்
சண்டைக்காட்சி: ஓம் சிவபிரகாஷ்
சவுண்ட் எஃபெக்ட்ஸ்: சி. சேது
மிக்ஸிங் அட்மோஸ் – டி. உதயகுமார்
தயாரிப்பு வடிவமைப்பு: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை: செந்தில் அழகன்
வடிவமைப்பாளர்: ஷபீர்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this