HomeCinemaNEEK பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய்...

NEEK பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார்!

Published on

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதியை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அவரது புதிய திரைப்படமான ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். அங்கு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அன்பான செயல், படத்திற்கு கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) மற்றும் பிரபல தெலுங்கு யூடியூப் பிரபலமாக இருந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாக துர்கா இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குநர்கள் செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர், ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
இளமை, உணர்ச்சி மற்றும் நவீன கால உறவுகளை மையமாகக் கொண்ட புதுமையான காதல் கதையில் உருவான இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
Zinema Media and Entertainment Ltd, தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி தனஞ்செயன் ஆகியோரின் தயாரித்துள்ளனர்.
படத்திற்கு புத்துணர்ச்சி சேர்க்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த திறமையான இசையமைப்பாளர் ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் பி ஜெ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவை பி ஜி முத்தையா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்குநராக  பி மகேந்திரன் பணியாற்றுகிறார். படம் வலுவான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன் உருவாகி வருகிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this