HomeCinemaபிரதீப் ரங்கநாதன் நடித்த LIK ('லவ் இன்சூரன்ஸ் கம்பெனி') தீபாவளி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) தீபாவளி ரிலீஸ்!

Published on

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17-ம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.‌

படத்தில் கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பிக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

முன்னதாக பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் – அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் (தீமா தீமா) பெரும் வரவேற்பினை பெற்றது. புதுவிதமான கதைககளத்தில் உருவாகியிருக்கும், இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்குகிறார்.

Latest articles

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=6pCmdoVdnpk  Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் வெப் சீரிஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைத்...

ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார்! -அப்பா குட்டி படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் விஜய் ஆண்டனி பற்றி இயக்குநர் மு. மாறன் 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம்...

உற்சாகமாக நடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி.' ஃபேண்டஸி...

More like this