HomeCinemaபிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18- தேதி...

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18- தேதி ரிலீஸ்!

Published on

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

விரைவில் படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர், ஸ்னீக் பிக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பினை பெற்றிருப்பதாலும் இப்படத்தின் பாடல்களுக்கும் படத்திற்கும் ரசிகர்களிடத்திலும், திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்குகிறார்.

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this