HomeCinemaகபாலி லிங்கேஷ், லண்டன் லியா நடிக்கும் படத்தின் ரிலீஸுக்கான பணிகள் தீவிரம்!

கபாலி லிங்கேஷ், லண்டன் லியா நடிக்கும் படத்தின் ரிலீஸுக்கான பணிகள் தீவிரம்!

Published on

மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் மென்மையான முக்கோண கதையில் உருவாகும் திரைப்படத்தில், லிங்கேஷ், லண்டனைச் சேர்ந்த லியா நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக இப்படத்திற்கான கதையை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. முதல் படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர்.

லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா? காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.

கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோட்’ படத்தில் நாயகனாகவும் நடித்தவர் லிங்கேஷ். லியா பிரிட்டிஷ் நடிகை. அவர்களுடன் திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடிக்க மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:- 
தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – Sky wanders Entertainment ஜெயலட்சுமி
நிர்வாக தயாரிப்பு – காட்பாடி ராஜன்
ஒளிப்பதிவு – மூடர்கூடம் டோனி ஜான்
இசை – சாண்டி சாண்டெல்லோ
எடிட்டிங் – தனி ஒருவன் கோபி கிருஷ்ணா
பாடல்கள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி
பாடியவர்கள் – ஸ்வேதா மோகன், சைந்தவி, ஶ்ரீதர் சேனா, திலீப் வர்மன் ( மலேசியா ), அனிதா ஷேக்
மக்கள் தொடர்பு – வேலு

Latest articles

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப்...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது...

கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது; பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன! -அப்பா குட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி  

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர்...

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

More like this