HomeCinemaகுழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷி சுவாமி ஐயப்பன் படத்திற்காக, திரைக் கலைஞர்களுடன் ஆடிப்பாடிய பக்திச் சிலிர்ப்பூட்டும்...

குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷி சுவாமி ஐயப்பன் படத்திற்காக, திரைக் கலைஞர்களுடன் ஆடிப்பாடிய பக்திச் சிலிர்ப்பூட்டும் பாடல்!

Published on

குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியின் நடனம் இடம்பெற்ற எங்க அப்பா இசை ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘சுவாமி சரணம் பாடுவோம்‘ என்ற இரண்டாவது இசை ஆல்பத்தில் திரைக்கலைஞர்கள் பலருடன் இணைந்து கருப்பாடை அணிந்து ‘கார்த்திகையில் மாலையிட்டு சரணம் பாடுவோம்; சுவாமி சரணம் பாடுவோம்; நெய்விளக்கு தீபமிட்டு சரணம் பாடுவோம்‘ என்று ஆடிப்பாடி நடித்திருக்கிறார்.

இந்த பாடல் காட்சியை கேரளாவின் மலைப்பகுதிகளில் உள்ள புல்லுமேடு, வாகமன், பசுப்பாறை, மேரி குளம், பருந்துபாறை மற்றும் ஐயப்பன் கோவிலைச்சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளார்கள்.

குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியுடன் திரைக்கலைஞர்கள் பாவா லட்சுமணன், காதல் சுகுமார், கொட்டாச்சி, ஆன்ந்த் செல்வராஜ், செந்தூர்பாண்டியன், சாரப் பாம்பு சுப்புராஜ், காதல் சரவணன், ராஜாஜிராஜன், சித்ரகுப்தன், தெனாலி சாமி, சங்கர், சிவலிங்கம் மற்றும் பலர் ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள்.

இந்த பாடல் காட்சி கால் கொலுசு படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்.வி.ரிஷி தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘சுவாமி ஐயப்பன்’ வாழ்க்கை வரலாற்று படத்தில் இடம் பெறுகிறது.

இந்த பாடலானது, கதைப்படி மாலைப் போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும், பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி தப்பித்து ஐயப்பனின் ஆசியோடு ஐயனை தரிசனம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் பாடலாக உருவாகியுள்ளது.

படக்குழு:-
எழுத்து, இயக்கம்: எஸ்.வி.ரிஷி
தயாரிப்பு: திருமதி அனீஷா சதீஷ்
இசை – சந்தோஷ் சாய்
ஒளிப்பதிவு: ரெஜி
எடிட்டிங்: பிரகாஷ் மப்பு ,
தயாரிப்பு மேற்பார்வை: சைமன் நெல்சன்
மக்கள் தொடர்பு: பெருதுளசி பழனிவேல்

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this