Monday, December 8, 2025
spot_img
HomeMovie Reviewலப்பர் பந்து சினிமா விமர்சனம்

லப்பர் பந்து சினிமா விமர்சனம்

Published on

ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் போட்டி, பொறாமை திறமையாளர்களுக்கு எதிராக நடக்கும் அக்கிர அநியாயங்கள் என பார்த்துப் பழகிய கண்களுக்கு காதல், காமெடி கலாட்டாக்களை கலந்து கட்டி பார்க்கும் வாய்ப்பை தந்திருக்கிற ‘லப்பர் பந்து.’

இளைஞன் அன்பு (ஹரிஷ் கல்யாண்), தான் காதலிக்கிற பெண்ணின் அப்பாவுடன் கிரிக்கெட் களத்தில் மோதுகிறான். அதனால் அவருக்கு எதிரியாகிறான். அன்பு காதலிக்கும் பெண்ணின் அம்மா கிரிக்கெட் விளையாட்டை வெறுப்பவர். காதலி, தன் அம்மா ஒத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணத்துக்கு சம்மதிக்கும் மனநிலையில் இருக்கிறார்.

இப்படி அன்புக்கு காதலிலும் விளையாட்டிலும் சிக்கல் உருவான நிலையில் அடுத்தடுத்து நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் காரசாரமான சண்டை சச்சரவுகள் அரங்கேறுகிறது; வயிறு வலிக்க சிரிக்கும்படியான சம்பவங்களும் கடந்து போகிறது; காதல் விவகாரத்தில் நாம் எதிர்பார்ப்பதே நடக்கிறது. இயக்கம் தமிழரசன் பச்சமுத்து

கிரிக்கெட் பேட்டை தொடும்போது வெற்றி பெறுவதில் உறுதியாக இருப்பது, காதலில் வருகிற பிரச்சனைகளை சமாளிக்கும்போது நிதானம் காட்டுவது என இரண்டு பக்கமும் ஹரிஷ் கல்யாணின் கச்சிதமான நடிப்பு கவர்கிறது.

‘கெத்து’ என்ற பெயரைச் சுமந்து கிரிக்கெட்டில் கெத்தாக வெறித்தனம் காட்டியிருக்கும் அட்டகத்தி தினேஷ், கல்யாண வயதிலிருக்கும் பெண்ணுக்கு தந்தையாக தோற்றத்திலும் நடிப்பிலும் முதிர்ச்சி காட்டியிருக்கிறார்.

அதட்டலும் உருட்டலுமான நடிப்பால் தன் பாத்திரத்தை பலப்படுத்தியிருக்கிறார் தினேஷுக்கு மனைவியாக வருகிற ஸ்வாசிகா.

டெம்ப்ளேட் காதலியாக வந்தாலும், காதலிப்பவனை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என தன் அம்மாவிடம் ஆவேசம் காட்டும்போது அட என்றிருக்கிறது சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு.

காளி வெங்கட்டுக்கு கம்பீரமான வேடம்; நடிப்பிலும் கம்பீரம் தெரிகிறது. பால சரவணன் கதையின் கனத்தை பங்கிட்டுக் கொள்ளவும் கலகலப்புக்கும் உதவியிருக்கிறார்.

விளையாட்டில் இணைபவர்களிடையே சாதி பார்ப்பது, சூழ்ச்சியால் ஜெயிக்க நினைப்பது என அதிரடியாக களமாடியிருக்கிறார் டி எஸ் கே. மற்றவர்களும் கதையோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.

ஆதித்யா கதிரின் கிரிக்கெட் நேர்முக வர்ணனைகளும், மைதானத்தில் ஒலிக்கும் விஜய்காந்த் பாடலும் வெற்றி தோல்வி தருணத்துக்கேற்ப மாறுகிற மற்ற பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஊக்கமருந்தாக மாறி கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பு தந்திருக்க, ‘சில்லாஞ்சிறுக்கியே’ பாடல் தாலாட்டின் சுகத்தை தந்துபோகிறது.

ஒளிப்பதிவு நேர்த்தி.

நடிகர் நடிகைகள் தேர்வு, அவர்களின் நடிப்பு, காதல், மோதல், காமெடி, நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் என படத்தில் இடம்பெற்ற அத்தனை சங்கதிகளும் மனதுக்கு நிறைவு தரும்படி இருப்பதால், தாராளமாய் தியேட்டருக்கு போகலாம்; ஏராளமாய் மகிழலாம்!

Rating 4.5 / 5

Latest articles

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...

 ‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்! 

இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம்...

More like this

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...
error: Content is protected !!