HomeMovie Reviewகீனோ சினிமா விமர்சனம்

கீனோ சினிமா விமர்சனம்

Published on

ஹாரர் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிற உளவியல் திரில்லர்.

சிறுவன் தரண் திடீர் திடீரென தனக்கு முன் தோன்றும் பேய் போன்ற நபரைக் கண்டு பயப்படுகிறான். அவனது பெற்றோர் அவனை ஏதேனும் அமானுஷ்ய சக்தி சுற்றி வளைக்கிறதோ என்று சந்தேகப்படுகிறார்கள். அதற்கான பரிசோதனைகளை நடத்தினால் அப்படி எதுவும் இல்லை என தெரிகிறது. அடுத்ததாக மனநல மருத்துவர் மூலம், அவன் ஏன் பயப்படுகிறான் என்பதை தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன் மூலம் அவன் வினோதமான பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிகிறது. அந்த பிரச்சனை நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறது…

தன் எதிரிலும் கனவிலும் அடிக்கடி தோன்றும் கீனோ என்ற உருவத்தைக் கண்டு பயப்படுவதும், தூக்கமின்றி தவிப்பதும், கையில் கிடைத்த பொருளால் அந்த உருவத்தை தாக்குவதுமாக தரணான வருகிற கந்தர்வா தனது கதாபாத்திரத்தின் தன்மையை தன் நடிப்பில் மிகச்சரியாக பிரதிபலித்திருக்கிறார்.

தரணுக்கு அப்பாவாக வருகிற மகாதாரா பகவத்தும், அம்மாவாக வருகிற ரேணு சதீஷும் பிள்ளை படும் அவஸ்தைகளைக் கண்டு பதறுவதும் அவனை பிரச்சனையிலிருந்து மீட்க முயற்சிப்பதும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

மனநல மருத்துவராக வருபவர், கீனோபோபியா பற்றி விளக்குவது ‘மனிதர்களுக்கு இப்படியெல்லாம் கூடவா பிரச்சனைகள் உருவாகும்?’ என ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் விளக்கும் விதம் மிலிட்ரி வகுப்பெடுப்பதுபோல் கம்பீரமாக இருக்கிறது.

மற்ற பாத்திரங்களில் வருகிற மிகச்சிலர் கச்சிதமாக நடித்திருக்க, ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

படத்தை தயாரித்திருக்கிற கிருத்திகா காந்தி படத்தொகுப்பாளராகவும் பங்களித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள், இசை, இயக்கம் என பலதுறை பணிகளை இழுத்துப்போட்டு செய்திருக்கும் ஆர் கே திவாகர், ஹாரர் படம் போல் தொடங்கி, உள்வியல் திரில்லராக கதையை நகர்த்தியிருப்பது விறுவிறுப்புக்கு கேரண்டி தருகிறது.

இந்த படத்தின் மூலம் சமூகத்துக்கு கிடைப்பது, ‘நம் வீட்டுப் பிள்ளைகள் வினோதமான பிரச்சனைகளை சந்திக்கும்போது பேய், பிசாசு, மாந்திரீகம் என அமானுஷ்ய விஷயங்களை மட்டுமே சுற்றி வராமல், மனநல மருத்துவரை நாடுவது அவசியம்’ என்கிற விழிப்புணர்வு!

Rating 3 / 5

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this