HomeCinemaநான்கு பேர் கைகளுக்கு கிடைத்த துப்பாக்கி என்னவெல்லாம் செய்கிறது? வித்தியாசமான கதையம்சத்தில் 'ஒன்ஸ் அபான் எ...

நான்கு பேர் கைகளுக்கு கிடைத்த துப்பாக்கி என்னவெல்லாம் செய்கிறது? வித்தியாசமான கதையம்சத்தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.’

Published on

ஹைபர் லூப் வகை படைப்பாக, திரில்லர் சப்ஜெக்டில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’

ஹைபர் லூப் வகை படைப்பாக, திரில்லர் சப்ஜெக்டில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் பரத், ஷான், ராஜாஜி என மூவர் கதைநாயகர்களாக நடிக்கின்றனர்.

கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, டாணாக்காரன் அஞ்சலி நாயர், ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி ஆகியோர் நடிக்க, மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடிக்கின்றனர். திருநங்கை தீக்‌ஷா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இதுவரையிலான படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகிறது.

படத்தை இயக்குகிற இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் முருகனிடம் பேசியபோது, ”மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.

அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்
இசை – நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின்
வசனம், பாடல்கள்: ஜெகன் கவிராஜ்
ஒளிப்பதிவு: காளிதாஸ், கண்ணன்
எடிட்டிங்: ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் ஷா\ன் லோகேஷ்
கலை இயக்குநர் நட்ராஜ்
சண்டைக்காட்சி: சுகன்
காஸ்ட்யூம் டிஸைனர்: ரிஸ்வானா
லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர்
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார்

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this