HomeCinemaஎகிறும் எதிர்பார்ப்பு... ‘கல்கி 2898 AD' படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்!

எகிறும் எதிர்பார்ப்பு… ‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்!

Published on

முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’ படத்திலிருந்து, மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!. படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியினை சமூக ஊடகங்களில் ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் ‘பைரவா’ படத்தைப் பகிர்ந்து, காசியின் எதிர்கால தெருக்களிலிருருந்து, ‘கல்கி 2898 AD’ இன் பைரவா உங்களுக்காக என தெரிவித்துள்ளது படக்குழு.

புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க மிரட்டலாக இருக்கிறது. முழுமையான கறுப்பு நிற ஆடையுடன், தலையில் கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this