HomeCinemaதில்லை, பாலை, சிந்துவாரம், புன்னை, மகிழம்... கபிலன் வைரமுத்துவின் சின்னஞ்சிறு கவிதைகளுக்கு இசையமைக்கும் பாலமுரளிபாலு!

தில்லை, பாலை, சிந்துவாரம், புன்னை, மகிழம்… கபிலன் வைரமுத்துவின் சின்னஞ்சிறு கவிதைகளுக்கு இசையமைக்கும் பாலமுரளிபாலு!

Published on

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இருவரும் இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள்.

கபிலன்வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை உள்ளிட்ட பல்வேறு கவிதை நூல்களிலிருந்து ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறிய பாடல்களாக வடிவமைத்திருக்கிறார்கள்.

‘அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்’ என்று இசை ஆல்பத்தின் அறிமுகக் காணொளியில் கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார். தில்லை, பாலை, சிந்துவாரம், புன்னை, மகிழம் என சங்கப் புலவர் கபிலர் பாடிய 99 வகையான பூக்களில் ஐந்து பூக்களின் பெயர்களை ஐந்து பாடல்களுக்கு சூட்டியிருக்கிறார்கள்.

பாடல்களை பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட இசைக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். ரம்யா ராம்குமார், ராம்நாத் பகவத், அதிதி பவராஜு,ஷோபிகா முருகேசன், புவனா ஆனந்த் ஆகியோர் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். சின்னஞ்சிறு பாடல்களுக்கான ஓவியங்களை மாவீரன் மற்றும் அயலான் படங்களில் ஓவியராக பணியாற்றிய ராமமூர்த்தி வரைந்திருக்கிறார். வரிக் காணொளிகளை புரொஃபைல் மேக்கர் குழு செய்திருக்கிறார்கள்.

கபிலன்வைரமுத்து பாலமுரளி பாலு கூட்டணியில் ஏற்கனவே பணமதிப்பிழப்புக்கு எதிராக நடிகர் சிலம்பரசன் பாடிய டீமானிடேஷன் ஆந்தம் பாடலும், மது கலாச்சாரத்திற்கு எதிராக நடிகர் டி.ராஜேந்தர் பாடிய ஏந்திரு அஞ்சலி ஏந்திரு தனிப்பாடலும் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கபிலன்வைரமுத்து தற்போது இந்தியன் 2, இந்தியன் 3, கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this