HomeCinemaசூர்யாவின் பிறந்தநாளில் வெளியான ‘கங்குவா' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

சூர்யாவின் பிறந்தநாளில் வெளியான ‘கங்குவா’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!

Published on

நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படைப்பான ‘கங்குவா’ படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

படம் துவங்கியதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தக வட்டாரங்களிலும் இந்தப் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் படத்தின் புரோமோ டீசரை சூர்யாவின் பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.

போஸ்டரில் சூர்யாவின் இரு தோற்றமும் பிரமாதமாக இருக்கிறது. சூர்யாவின் வசீகரமான திரை இருப்பு மற்றும் சக்திவாய்ந்த கண்கள் ரசிகர்களை இதில் அதிக அளவில் கவர்ந்தன. படத்தின் ஒவ்வொரு புரோமோஷனல் மெட்டீரியலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த நிலைக்கு உயர்த்துவதாகவே இருக்கிறது.

‘கங்குவா’வின் உலகம் புதுவிதமாக அமைந்து பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் புதிய காட்சி அனுபவத்தை அளிக்கும். மனித உணர்வுகள், திறமையான நடிப்பு மற்றும் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய அளவிலான அதிரடி காட்சிகள் படத்தின் முக்கிய மையமாக இருக்கும். இந்த பான்-இந்தியன் படமான ‘கங்குவா’வின் பணிகள் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பை முடித்தார்.

சூர்யா மற்றும் திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்திருக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட ஸ்டுடியோ கிரீன் சிறந்த விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நடிகர் சூர்யா ரசிகர்களின் உற்சாகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் படம் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்களை படக்குழு அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’, ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’, சமீபத்தில் வெளியான ‘பத்துதல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துத் தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

படக்குழு:
எடிட்டர்: நிஷாத் யூசுப்
ஆக்‌ஷன்: சுப்ரீம் சுந்தர்,
வசனங்கள்: மதன் கார்க்கி,
எழுத்தாளர்: ஆதி நாராயணா,
பாடல் வரிகள்: விவேகா – மதன் கார்க்கி,
தலைமை இணை இயக்குநர்: ஆர்.ராஜசேகர்,
ஆடை வடிவமைப்பாளர்: அனு வர்தன் (சூர்யா) & தட்ஷா பிள்ளை,
ஆடைகள்: ராஜன்,
நடனம்: ஷோபி,
ஒலி வடிவமைப்பு: டி உதயகுமார்,
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு,
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா,
கிரியேட்டிவ் விளம்பரங்கள்: BeatRoute,,
டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டலி,
VFX: ஹரிஹர சுதன்,
3டி: பிரைன்வைர் ​​டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: ஆர்.எஸ். சுரேஷ்மணியன்,
தயாரிப்பு நிர்வாகி: ராமதாஸ்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.வி. தினேஷ் குமார்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஏ.ஜி.ராஜா,
ஸ்டுடியோ கிரீன் CEO: G. தனஞ்செயன்,
இணை தயாரிப்பாளர்: நேஹா ஞானவேல்ராஜா,
தயாரிப்பு: கே.இ. ஞானவேல்ராஜா, வம்சி-பிரமோத்

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this