HomeGeneral33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் - பாடகர் அறிவின் தாயார் பெ.தேன்மொழிக்கு டாக்டர்...

33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவின் தாயார் பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது!

Published on

இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு மட்டும் நிறைவடைவதில்லை. மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, தன்னம்பிக்கையை வளர்ப்பது, பள்ளிச் சூழலை மேம்படுத்துவது, பெற்றோர்களையும் சமூகத்தையும் கல்விப் பயணத்தில் இணைப்பது என ஆசிரியர்களின் பங்களிப்பு பல்வேறு தளங்களில் தொடர்கிறது.
குறிப்பாக வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும், அவர்களை அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களாக உருவாக்குவதும் ஆசிரியர்களின் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்.
இந்த அர்ப்பணிப்பையும் சிறப்பான கல்விப் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி மற்றும் சிறந்த கல்வியாளரான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விருது, ஆசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் கல்விச் சேவைக்கும் வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது… கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து  வருகிறது (Kalvi Anjali)
 திருமதி பெ. தேன்மொழி அவர்களின் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் பணியின் பின்னணியில் எண்ணற்ற மாணவர்களின் கல்விப் பயணம், அவர்களின் வளர்ச்சியில் செலுத்திய அக்கறை, பள்ளியின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கல்வியின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை உள்ளது.
ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் இந்த விருது, அவருடைய தனிப்பட்ட சாதனைக்கு மட்டுமல்லாமல், அவர் கல்வி கற்றுக் கொடுத்த எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

Latest articles

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

சந்தீப் கிஷன் நடிக்க ஜேசன் சஞ்சய் இயக்கிய’சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ – ரிலீஸ் நிகழ்வு உற்சாகமாக நடந்தது!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது....

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது....

More like this