HomeCinemaமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 'காட்டான்' படத்தின் டிரெய்லர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காட்டான்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Published on

நடிகர் விஜய் சேதுபதி முத்து என்ற கேரக்டரில் நடிக்கும் படம் ‘காட்டான்.’ அந்த கேரக்டரின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி  கதைநடையை விரிவாக்குகிறது.
இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன்  பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில்  காட்டப்படும்  டிரெய்லர்  வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படத் தொடங்குகின்றன.
இந்தத் தொடரில், மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்” என்றார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக மார்ச் 27 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் எம். மணிகண்டன் உருவாக்கிய இந்தத் தொடர், அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக அறியப்படுகிறது. இதை எம். மணிகண்டனும், பி. அஜித் குமாரும் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் மதுநீலகண்டன் மற்றும் என் ஷண்முக சுந்தர் இந்தத் தொடரின் வலுவான காட்சித்தன்மையை வடிவமைத்துள்ளனர். ‘காட்டானின் உலகத்திற்கு சக்திவாய்ந்த ஒலிபரிமாணத்தை வழங்கும் வகையில் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this