HomeCinemaஅன்னா பென் _ 'நாய் சேகர்' கிஷோர் ராஜ்குமார் நடிக்கும் கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படத்தின் ஃபர்ஸ்ட்...

அன்னா பென் _ ‘நாய் சேகர்’ கிஷோர் ராஜ்குமார் நடிக்கும் கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்!

Published on

‘நாய் சேகர்’ பட இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி நாயகனாக  நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் கதைநாயகியாக நடித்துள்ளார்.

காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில்  படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாள்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கி தயாரித்துள்ள முதல் படம் இது.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this