HomeCinemaகன்னடம், தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை! -கேரள அரசு விருதுகள் வென்ற இயக்குநர்...

கன்னடம், தமிழ் என்ற வேற்றுமையை நான் இங்கு கண்டதில்லை! -கேரள அரசு விருதுகள் வென்ற இயக்குநர் தயாள் பத்மநபான்

Published on

‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழரான இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும், தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் (ஆஹா ஒரிஜினல்) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

பழம்பெரும் கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் ‘ஆ கராள ராத்திரி.’ பின்னர் இதனை “அனகனகா ஒ அதித்தி” என்ற பெயரில் தெலுங்கிலும், “கொன்றால் பாவம்” என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார்.

2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக, “ஆ கராள ராத்திரி”. சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசீலனைப்பட்டியலில் கே.ஜி.எப்-1 போன்ற படங்களும் இருந்தன.
2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விருது வழங்கும் விழா, நவம்பர் 3-ம் தேதி மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அந்த விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதையும், தயாரிப்பாளர் என்ற முறையில் சிறந்த படத்திற்கான விருதையும் தயாள் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் திரைப்பட விருது பெறுவது பெருமைக்குரிய செய்தியாகும். ஏற்கனவே இவர் 2014-ஆம் ஆண்டு, கர்நாடக அரசின் சிறந்த படம், சிறந்த இயக்குநருக்கான திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

இவர் தற்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தயாள் பத்மநாபன் தன்னுடைய திரை பயணத்தின் அனுபவங்களைப் பற்றி கூறியதாவது :

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். மத்திய அரசு வேலைக்காக பெங்களூரு சென்றேன். பின்பு சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அங்கேயே உருவானேன். கன்னடம் எழுத படிக்க தெரியாமலேயே 19 படங்களை இயக்கியிருக்கிறேன். கன்னடத்தில் தொழில் முறை வாசகர்களைக் கொண்டு இலக்கியங்களை படித்தேன். இதன் மூலம் இரண்டு மாநில விருதுகள் அதிலும், இலக்கியத்திற்காக விருது வாங்கியதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

அது மட்டுமில்லாமல், அரசியல் சார்ந்து தான் மாநில அளவில் வேறுபட்டு இருக்கிறோம் கலை என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதற்கு சினிமா ஒரு சிறந்த உதாரணம். மேலும், நான் 37 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்து வருகிறேன். இதுவரை கன்னடம் – தமிழ் என்ற வேற்றுமையை நான் எங்கும் பார்த்ததில்லை.

சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்காக மாநில விருது கொடுத்து என்னை கௌரவித்த கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

எனது தாய் மொழியான தமிழிலும் பல விருதுகள் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்றார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this