HomeCinema‘மார்கோ’ வெற்றிக்குப் பின் ‘கட்டாளன்’ படத்தைத் தொடங்கிய Cubes Entertainment 

‘மார்கோ’ வெற்றிக்குப் பின் ‘கட்டாளன்’ படத்தைத் தொடங்கிய Cubes Entertainment 

Published on

‘மார்கோ’ எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரிக்கிறார்.  இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரமாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது.

இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் விழாவுக்கு அழகை கூட்டின. மேலும், படத்தின் கதைக்களத்தை பிரதிபலிக்கும் விதமாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட அரங்கில், பூஜை கோலாகலமாக நடத்தப்பட்டது.

இந்த மாபெரும் விழாவில், படத்தின் முன்னணி நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்றனர். அந்தோணி வர்கீஸ், கபீர் துகான் சிங், ரஜிஷா விஜயன், ஹனான் ஷா, ஜகதீஷ், சித்திக், பார்த்த் திவாரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

₹45 கோடி செலவில் உருவாகும் “கட்டாளன்” திரைப்படம் பான்-இந்திய ஆக்சன் திரில்லராக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்க, காந்தாரா, மகாராஜா போன்ற படங்களால் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற கன்னட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ‘மார்கோ’வில் KGF புகழ் ரவி பஸ்ரூரை மலையாள சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய Cubes Entertainment, இப்போது கட்டாளன் மூலம் மற்றொரு பெரிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறது.

டைட்டில் டிசைனுக்காக, ஜெயிலர், லியோ, ஜவான், கூலி போன்ற பான்-இந்தியன் ப்ளாக்பஸ்டர்களில் பணியாற்றிய IdentLabs குழு இப்படத்தில் பணியாற்றுகிறது. நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்க, தெலுங்கு  நடிகர் சுனில், கபீர் துகான் சிங், மலையாள Vlogger-பாடகி ஹனான் ஷா, ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு, மூத்த நடிகர்கள் ஜகதீஷ் மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற ஆக்சன் கலைஞர் கேச்சா காம்பக்டி (பொன்னியின் செல்வன் பார்ட் 1, பாகுபலி 2, ஜவான், பாகி 2, Ong Bak 2 போன்ற படங்களில் பணியாற்றியவர்) இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். உன்னி R வசனங்களை எழுதியுள்ளார். எடிட்டிங் – ஷமீர் முகம்மது, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – தீபக் பரமேஸ்வரன். மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் S2 Media.

படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில்…

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this