HomeCinemaகார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

Published on

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி, டாணாக்காரன் இயக்குநர் தமிழ் ஆகியோரின் மற்றொரு லட்சிய முயற்சியாக அமையவிருக்கும் படம் ‘மார்ஷல்.’

1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரமாண்டமான ஆக்ச‌ன் டிராமா கதைக்களத்தில் உருவாகிறது.

இன்று நடந்த பட பூஜையில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் மத்தியில் தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டனர்.

மார்ஷல் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

இந்தப் படத்தில் 1960-களின் ராமேஸ்வரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான செட்கள் இடம்பெற இருக்கிறது.

மார்ஷல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this