HomeCinemaமே மாதம் 9-ம் தேதி ரிலீஸாகிறது ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடித்துள்ள 'கலியுகம்.' 

மே மாதம் 9-ம் தேதி ரிலீஸாகிறது ஷ்ரத்தா ஶ்ரீநாத், கிஷோர் நடித்துள்ள ‘கலியுகம்.’ 

Published on

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில் போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ‘கலியுகம்.’

மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படத்தின்வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார்.

ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும்.

இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். உலகத் தரத்தில், உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், மிகச்சிறந்த திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this