HomeCinemaதிரைப்படக் கல்லூரி மாணவர்களின் உருவாக்கத்தில் இதுவரை சொல்லப்படாத கதையில் உருவான 'கீனோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் உருவாக்கத்தில் இதுவரை சொல்லப்படாத கதையில் உருவான ‘கீனோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

Published on

ஆர்கே திவாகர் இயக்கத்தில், மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மூவர் இணைந்து, இதுவரை சொல்லப்படாத கதையில் உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘கீனோ.’

படத்தில் புதுமுகங்கள் மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ் ஆகியோருடன் கண்ணதாசன், ராஜேஷ், கோபி ஷெட்டி உள்ளிட்டோரும் இன்னும் பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

இதுவரை நாவல்களில், திரைப்படங்களில் என சொல்லப்படாத கதைக் கருவும் கீனோ என்ற கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும் புதுமையானதாகவும் இருக்கும்’ என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் படக்குழுவினர்.

இந்த படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 14-ம் தேதி சித்திரை திருநாளன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் முரளி ராமசுவாமி, இயக்குநர் இதயம் கதிர், இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டார்கள்.

படம் விரைவில் தியேட்டர்களில் வெளிவரவிருக்கிறது.

இந்த படத்திற்கு கதை எழுதி, இசையமைத்து, இயக்கியிருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏவி.எம் மெமோரியல் விருதும் தங்கப் பதக்கமும் பெற்றவர். இவர் இயக்குநர் கதிரிடம் காதல் வைரஸ் படத்தில் உதவி இயக்குநராகவும் இயக்குநர் மிஷ்கினின் சித்திரம் பேசுதடி நந்தலாலா திரைப்படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.

படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாணவ விருதை அன்றைய முதல்வர் கலைஞரிடம் பெற்றவர். இவர் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்த் திரையுலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை டாக்டர் கலைஞரிடம் பெற்றவர்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – ஆலிவர் டென்னி

தயாரிப்பு, படத்தொகுப்பு – கிருத்திகா காந்தி

எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் – சிவம்

இணை தயாரிப்பு – மகாதரா பகவத், ஆர்.கே திவாகர்

மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this