HomeCinemaஅருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் தமிழக முதலமைச்சர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் தமிழக முதலமைச்சர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் புகழாரம்!

Published on

மறைந்த மூத்த அரசியல் தலைவரும், சத்யா மூவிஸின் நிறுவனரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர் எம் வீ என்று அறியப்பட்டவருமான இராம வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம் ‘கிங் மேக்கர்’ என்ற பெயரில் மிக பிரமாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்கத் தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாக தயாராகி வருகிறது.

தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படத்தை அவருக்காக சிறப்பாக  தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது சத்யா மூவிஸ் நிறுவனம்.

முன்னதாக இந்த படத்தின் 8 நிமிட முன்னோட்டம் அருளாளர் இராம வீரப்பன் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் பங்கேற்று சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட  திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர்.

ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், காஞ்சி பெரியவர் ஆகியோறும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஐயாவை போற்றியுள்ளனர்.

பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், மற்றும் பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி ஆகியோறும், தமிழிலக்கிய துறையை சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களும், முன்னாள் அரசவை கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்களும் மேலும்  கலை இலக்கிய கல்விதுறையை சார்ந்த ஆன்றோர் சான்றோர் என அனைவரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர்.

முதல்வர் மு க ஸ்டாலின் ‘இந்த ஆவணப் படம் காலத்தின் கட்டாயம்’
என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் , ‘ஹி இஸ் த ரியல் கிங் மேக்கர்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப் (youtube.com/sathyamoviesonline) மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இராம. வீரப்பன் திராவிட இயக்கங்களின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோருடன் நெருங்கி பழகியவர்.

திராவிடம் மேலோங்க மாபெரும் பங்காற்றிய ஒப்பற்ற தலைவரான அவர் ஐந்து முறை தமிழக அமைச்சராகவும் மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this