HomeCinemaகொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் சினிமா விமர்சனம்

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் சினிமா விமர்சனம்

Published on

‘உதய கீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ என 80-களில் வெள்ளி விழாப் படங்களை தந்த இயக்குநர் கே ரங்கராஜிடமிருந்து காதல் காமெடி ஜானரில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.’

கார்த்திக், வைஷாலி இருவருக்கும் பணத்தில் மிதக்கிற ஆடம்பர வாழ்க்கை மீது ஆசை. உழைத்துச் சம்பாதித்து அப்படியான வாழ்க்கையை வாழ முடியாது என்பதால், கார்த்திக் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அவன் பார்வைக்கு வைஷாலி பணக்காரப் பெண்ணாக தெரிய, அவளை காதலிக்கிறான். வைஷாலியின் பார்வைக்கு கார்த்திக் பணக்காரனாக தெரிய அவள் அவனை காதலிக்கிறாள்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும், இருவரும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. ஏமாற்றத்தால் வெறுப்பாகி பிரிகிறார்கள். பிரிந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணக்கார வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தயாராகிறார்கள். அதன் விளைவுகள் என்னென்ன என்பது மீதிக் கதை… எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் எப்படி பணக்காரர்களாக நினைத்து ஏமாந்தார்கள் என்பது கதையிலிருக்கிற சுவாரஸ்யம்…

பணக்கார வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பவரை, அந்த வீட்டுக்கே எஜமானி என்று நினைத்து காதலிக்கும் கார்த்திக்காக ஸ்ரீகாந்த்.

கோடீஸ்வரர் வீட்டில் கார் டிரைவராக இருப்பவரை அந்த கோடீஸ்வரரே அவர்தான் என்று நினைத்து காதலிக்கிற வைஷாலியாக புஜிதா பொன்னாடா.

ஒருவரையொருவர் பணக்காரர்கள் என தவறாக புரிந்துகொண்டு காதல் வலையில் விழுவதில் தொடங்கி, ஏமாற்றத்தைச் சந்திப்பது, விரும்பிய பணக்கார வாழ்க்கை தேடி வரும்போது அதற்கேற்ப மாறுவது என இருவரும் தந்திருப்பது குறைசொல்ல முடியாத நடிப்பு. ஜோடிப் பொருத்தமும் அசத்தல்.

இரண்டாவது நாயகியாக வருகிற நிமி இம்மானுவேலின் பங்களிப்பு கச்சிதம்.

ஸ்ரீகாந்த்தின் குடும்பம் புஜிதாவை நம்ப வைக்க, புஜிதாவின் குடும்பம் ஸ்ரீகாந்தை நம்பவைக்க என இருவரின் குடும்பமும் பணக்காரர்கள் போல் நடிப்பது கலகலப்புக்கு உத்தரவாதம் தருபவை. அந்த உத்தரவாதத்தை தருபவர்கள்களின் பட்டியல் நளினி, அனுமோகன், ரமேஷ் கண்ணா, வினோதினி, சாம்ஸ், பருத்திவீரன் சுஜாதா என கொஞ்சம் பெரிதாக இருக்க, மூத்த நடிகை சச்சு கதையோட்டத்தில் சுறுசுறுப்பாக கலந்திருக்கிறார்.

டெல்லி கணேஷ், கே ஆர் விஜயா தம்பதியாக வருகிறார்கள்; ஏற்ற வேடத்தில் தரமான நடிப்பைத் தருகிறார்கள்.

மரணப் படுக்கையில் கிடக்கிற பெரியவர் ஒருவர் குளறிக்குளறி பேசுவதை ஒருவர் தப்பும் தவறுமாக எடுத்துச் சொல்லும் தருணங்களில் தியேட்டர் முழுக்க வெடிச்சிரிப்பு.

ஆர்கே சுந்தர் இசையில் பாடல்கள் அடிக்கடி எட்டிப் பார்க்கின்றன. சில பாடல்கள் சாரல் மழையாய் மனதை வருடுகின்றன.

தாமோதரன் ஒளிப்பதிவில் காட்சிகள் அத்தனையும் ஹோலிப் பண்டிகை கொண்டாடியிருக்கிறது.

ஸ்ரீகாந்தும் புஜிதாவும் ஒருவரை ஒருவர் பணக்காரர்கள் என நம்புவதிலிருந்து, நிறைவுக் காட்சியின் விமானப் பயணம் வரை எதிலுமே லாஜிக் பார்க்காவிட்டால் இரண்டேகால் மணிநேரம் நிச்சயமாய் சிரித்து ரசிக்கலாம்.

‘உண்மையான காதலுக்கு அழிவில்லை’, ‘பணம் நிரம்பியவரல்ல; உணர்வுகளை மதிக்கும் எண்ணம் நிரம்பியவரே வாழ்க்கைக்கான நல்ல துணை’ என சில கருத்துக்களும் படத்தில் உண்டு.

Rating 3 / 5

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...