HomeCinemaகாதலர்களை மையப்படுத்திய கமர்ஷியல் படைப்பாக மலேசியத் தமிழர்களால் மலேசியாவில் படமாக்கப்பட்ட 'கண்நீரா' விரைவில் ரிலீஸ்!

காதலர்களை மையப்படுத்திய கமர்ஷியல் படைப்பாக மலேசியத் தமிழர்களால் மலேசியாவில் படமாக்கப்பட்ட ‘கண்நீரா’ விரைவில் ரிலீஸ்!

Published on

கதிரவென் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா.’ நாயகியாக சாந்தினி கவுர் நடிக்க, மாயா கிளம்மி, நந்தகுமார் என் கே ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும், நடித்துள்ள அத்தனைப் பேரும் மலேசிய வாழ் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல என்று பொருள். காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் நீரா. இரண்டையும் இணைத்து கண்நீரா என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

படத்தின் கதை எழுதி, இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.

படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் கதிரவெனிடம் பேசியபோது, ”லவ் படம் என்றாலே பேண்டஸி இருக்கும் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட மிகவும் யதார்த்தமான காதல் கதை.

நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் பேர் காதல் ரிலேசன்ஷிப்ல கண்டிப்பா இருப்பாங்க, இல்ல கடந்து வந்திருப்பாங்க. காதலர்களுக்கு என்னமாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதை ஆர்ட் ஃபிலிமா இல்லாம கமர்சியல் கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என் வாழ்வில் நடந்தது என் ஃபேமிலியில் நடந்தது என்று ரசிகர்களை குளோஸா அவங்க ஹார்டை டச் பண்ற மாதிரியான மிக்ஸ்சான எமோசன்ஸ் இதில் இருக்கு. படம் பார்ப்பவர்கள் தங்களை நிச்சயம் நெருக்கமாக தொடர்புபடுத்திப்பாங்க.

படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது” என்றார்.

படக்குழு:-
திரைக்கதை, வசனம், இயக்கம் – கதிரவென்
ஒளிப்பதிவு – ஏகணேஷ் நாயர்
இசை – ஹரிமாறன்
பாடல்கள் – கௌசல்யா.என்
கலை – குதூஸ் சங்கிலிஷா
நடனம் – மாஸ்டர் சேவியர், மாஸ்டர் முகிலன்.
தயாரிப்பு – உத்ரா புரொடக்சன்ஸ்  எஸ் ஹரி உத்ரா – மோர் 4 புரொடக்சன்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this