HomeCinemaவிஜய் டிவி குமரன் தங்கராஜன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கும் 'லக்கிமேன்' பாலாஜி வேணுகோபால்! கை கோர்த்த...

விஜய் டிவி குமரன் தங்கராஜன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்கும் ‘லக்கிமேன்’ பாலாஜி வேணுகோபால்! கை கோர்த்த ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர்.

Published on

திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ‘யாத்திசை’ மற்றும் யோகி பாபு நடித்த ‘லக்கிமேன்.’

பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார். குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார். ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

‘யாத்திசை’ தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் ‘லக்கிமேன்’ இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பெருமளவு நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிறது.

படத்தின் பெயர் உள்ளிட்ட மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this