HomeCinemaநிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதை ’ஜூடோபியா 2’ ஒரு மாதத்தில் ரிலீஸ்!

நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதை ’ஜூடோபியா 2’ ஒரு மாதத்தில் ரிலீஸ்!

Published on

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் இந்தியாவில் நவம்பர் 28 அன்று இந்திய திரையரங்குகளில் பிரத்தியேகமாக ’ஜூடோபியா 2’ திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.

புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள்.

இந்தப் படத்தில், கேரி டி’ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய பகுதிகளுக்கு ரகசியமாகச் செல்ல வேண்டும். அங்கு அவர்களின் பார்ட்னர்ஷிப்பும் சோதனைக்குள்ளாகிறது. படத்தில் ஷகிரா மற்றும் எட் ஷீரனின் ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர்கள் ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் மற்றும் தயாரிப்பாளர் யெவெட் மெரினோ ஆகியோரின் ’ஜூடோபியா 2’ படத்தில் ஃபார்ச்சூன் ஃபீம்ஸ்டர், குயின்டா பிரன்சன் மற்றும் கெஸல்லாக ஷகிரா ஆகியோரின் குரல்களும் இடம்பெற்றுள்ளது.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this