HomeCinemaமல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளைவிட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது! -'ஜென்ம நட்சத்திரம்' படத்தின் சக்ஸஸ் மீட்டில்...

மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளைவிட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது! -‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர் மணிவர்மன் 

Published on

தமன் அக்ஷன் கதாநாயகனாக நடிக்க, பி.மணிவர்மன் இயக்கியிருந்த ஜென்ம நட்சத்திரம்’ கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதையடுத்து படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் மணிவர்மன், “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வாய்ப்பு கொடுத்த அமோகம் ஸ்டுடியோஸ் சுபாஷினி மேம் மற்றும் விஜயன் சாருக்கு நன்றி. நிச்சயம் அடுத்து சக்சஸ் மீட்டில் சந்திப்போம். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷூக்கு நன்றி” என்றார்.

நடிகர் தமன், “என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்‌ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்‌ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. ரசிகர்கள் மற்றும் மீடியா கொடுத்த ஆதரவிற்கு நன்றி” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this