யோகிபாபு சிரிப்பூட்டுவதை தவிர்த்து சீரியஸாக நடித்திருக்கும் படம்.
மாயாஜாலக் கலையில் வித்தகரான தன் அப்பாவிடம் அந்த கலையைக் கற்றுக்கொண்டு பிழைப்பு நடத்தி வருபவர் யோகிபாபு. அவரை சில ரவுடிகள் டார்ச்சர் செய்கிறார்கள். திடீரென அவர் காணாமல் போகிறார்.
அவருக்கு என்னவானது என்பதை நோக்கி நகர்கிறது திரைக்கதை…
ரவுடிகளால் டார்ச்சர்; அதை போலீஸில் சொன்னால் அவர்களாலும் டார்ச்சர் என இரு பக்கமும் அடிபட்டு மிதிபட்டு அவதிப்படும்போது பரிதாப முகமும், தன்னை துன்புறுத்தியவர்களை பழிவாங்கும்போது ஆத்திர ஆவேச முகமும் காட்டியிருக்கிறார் யோகிபாபு.
யோகிபாபுவை காதலிக்கும் கடமையை குறையின்றி செய்திருக்கிறார் சாந்திராவ்.
ரவுடியிசம், வெட்டுக்குத்து என குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாக அருவி பாலா, மணிமாறன் உள்ளிட்டோர் கெத்தாக வலம் வருகிறார்கள்.
மற்றவர்கள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ஜிதின் கே ரோஷனின் பின்னணி இசை, மது அம்பட்டின் ஒளிப்பதிவு எளிமையான கதைக்களத்துக்கு ஏற்ப எளிமையாக இருக்கிறது.
எந்த வம்புதும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற சாமானியன் ஒருவனுக்கு திமிர் பிடித்தவர்கள் மன உளைச்சல் கொடுப்பதும் அதற்காக அவன் பழி வாங்குவதுமாய் நகர்கிற கதையில்,
ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிற பரபரப்பை சேர்த்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவம் தர நினைத்திருக்கிறார் இயக்குநர் வினீஷ் மில்லினியம். அப்படி நினைத்ததை மனம்போன போக்கில் செய்திருப்பதால், திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டாததால் ஜோரா கைய தட்ட முடியவில்லை!
Rating 2 /5