HomeCinemaஅடுத்த அதிரடிக்குத் தயாரான பிரசாந்த் வர்மா யுனிவர்ஸ். ராமர் கோவில் திறப்பு நாளில் ‘ஜெய் ஹனுமான்'...

அடுத்த அதிரடிக்குத் தயாரான பிரசாந்த் வர்மா யுனிவர்ஸ். ராமர் கோவில் திறப்பு நாளில் ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவக்கம்!

Published on

பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ஏற்கனவே முழுமையாக தயார் செய்துவிட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன், முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனைத் தொடங்க, அற்புதமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய நாளில், பிரசாந்த் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கப்பட்டது. முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்க, இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில், படக்குழு உற்சாகமாக உள்ளனர்.

இந்நிகழ்விலிருந்து ஒன்றிரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் ஒன்று, பிரசாந்த் வர்மா தெய்வத்தின் முன் நின்று ஸ்கிரிப்டை வைத்திருப்பதைக் காட்டினால், மற்றொன்று அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமான்’ படத்தின் கடைசி காட்சியைக் காட்டுகிறது.

இந்த பிரம்மாண்ட படைப்பினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this