HomeGeneralஜனநாயகன் சினிமா விமர்சனம்

ஜனநாயகன் சினிமா விமர்சனம்

Published on

தளபதி விஜய் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு போகும் பக்கா மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னர்.
விஜய் முழுநேர அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் நடித்த, அவரது திரைப்பயணத்தின் இறுதிப் படைப்பு என்பதால், உலகம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். தெலுங்கு ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்காகவும், 50% தமிழக அரசியல் களத்தை மையப்படுத்தியும் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்.’
கதை முன்னாள் காவல்துறை அதிகாரியான நாயகனை (விஜய்) சுற்றியே நகர்கிறது. தனது பொறுப்பில் வளரும் ஒரு இளம் பெண்ணை (மமிதா பைஜு) தைரியமான, எதற்கும் அஞ்சாத ஒரு ராணுவ அதிகாரியாக மாற்ற வேண்டும் என்பதே நாயகனின் லட்சியம். ஆனால், அந்தப் பெண்ணோ பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கிறார்.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட் உலகில் அசைக்க முடியாத சக்தியாக, அதிகார பலம் கொண்ட வில்லன் (பாபி தியோல்) சமுதாயத்திற்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுகிறார். ஒரு கட்டத்தில் வில்லனின் அநீதிகளால் நாயகனின் குடும்பமும், பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்கி அவளை எப்படி வீராங்கனையாக மாற்றுகிறார்? வில்லனின் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை விஜய் தனது அரசியல் மற்றும் அறிவுசார் சாதுரியத்தால் எப்படி வீழ்த்துகிறார்? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அவர் வழங்கும் அரசியல் தீர்வு என்ன? என்பதே ‘ஜனநாயகன்’ படத்தின் மீதிக்கதை. இயக்கம் ஹெச் வினோத்
திரை முழுக்க விஜய்யின் ஒன் மேன் ஆர்மியாக இயங்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் முழு எனர்ஜியையும் வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் வழக்கமான துள்ளல் தெரிகிறது. வசனங்கள், குறிப்பாக கடந்த தேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழலை சுற்றிச் சுழலும் வசனங்கள் வசனங்களைப் பேசும்போது தியேட்டர் அதிர்கிறது. மமிதா பைஜுவுக்கு வழிகாட்டும் தந்தை போன்ற கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார்.
‘அனிமல்’ படத்திற்குப் பிறகு தமிழிலும் பவர்புல் வில்லனாக மிரட்டியுள்ளார் பாபி தியோல். பயந்த சுபாவத்தில் இருந்து, சண்டையிட்டு வீராங்கனையாக மாறும் கதாபாத்திரத்தில் அசத்தலான பங்களிப்பை தந்துள்ளார் மமிதா பைஜு.
பூஜா ஹெக்டே ஒரு பாடலில் ஆடவும், கதையின் முக்கிய தருணங்களில் நாயகனுடன் வலம் வரவும் செய்கிறார். 
பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் கெத்து காட்ட, ரேச்சல் ரெபேக்கா கண்ணனி சிலை முன் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அசத்தலான நடிப்பைத் தந்திருக்க, சுனில், ரேவதி, கெளதம் மேனன், நிழல்கள் ரவி, பிரியாமணி, டி ஜே அருணாசலம், நரேன், ஜி எம் சுந்தர், ஷ்ரத் ரவி, அர்ஷத் என நட்சத்திரக் கூட்டம் அதிகம்.
அனிருத்தின் படத்தின் மிகப்பெரிய பலம். விஜய் பிரேமில் வரும்போதெல்லாம் தெறிக்க விடுகிற அதிரடி இசை ரசிகர்களை குஷியாக்குகிறது. பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. சண்டைக்காட்சிகள் அனல் பறக்கும் சம்பவங்களாக இருக்க, ஒளிப்பதிவின் தரம் படத்தின் பிரமாண்டத்தை அதிகரிக்கிறது.
படத்தின் முன்பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும், கமர்ஷியல் அம்சங்களுடனும் பயணிப்பது விறுவிறுப்பு.
இடைவேளைக் காட்சி ரசிகர்களுக்கு வழக்கத்தை விட பெரிய உற்சாகமாக அமைந்திருக்கிறது. பின்பாதியில் கார்ப்பரேட் அரசியல், சமூகத்திற்கான விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு, சுயசார்பு என பல விஷயங்கள் பேசப்படுகின்றன. தெலுங்கு ‘பகவந்த் கேசரி’ பார்த்தவர்களுக்கு சிலபல காட்சிகள் யூகிக்கும்படியாக இருக்கலாம்.
படம் மூன்று மணி நேரம், மூன்று நிமிடங்கள் ஓடுவதும், பின்பாதியில் சில காட்சிகள் சற்றே தொய்வாக நகர்வதும் சற்றே அயர்ச்சி தருகின்றன. எது எப்படியோ தங்களின் மாஸ் ஹீரோவின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்களுக்கு நிச்சயமாய் கொண்டாட்டம்தான்; பிளாஸ்ட் பிளாஸ்ட்தான்!

Latest articles

உற்சாகமாக நடந்த , அர்ஜுன்தாஸ் நடித்த கான்சிட்டி படத்தின் வெற்றி விழா!

அர்ஜூன்தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கான் சிட்டி'...

நயன்தாரா – கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=FF05kDJOgLk நயன்தாரா,  கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில்  இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும்,...

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5!

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின்...

இந்திய சினிமாவின் பல தலைமுறைகளை ஒரே மேடையில் இணைத்த ராமாயணம் திரைப்படத்தின் இனிய நிகழ்வு… டெல்லியில் உற்சாகம்!

இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான தருணம். ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல!...

More like this

உற்சாகமாக நடந்த , அர்ஜுன்தாஸ் நடித்த கான்சிட்டி படத்தின் வெற்றி விழா!

அர்ஜூன்தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கான் சிட்டி'...

நயன்தாரா – கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=FF05kDJOgLk நயன்தாரா,  கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில்  இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும்,...

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5!

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின்...