HomeGeneralஐ'ம் கேம் சினிமா விமர்சனம்

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

Published on

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது. பொருத்தப்பட்ட மாற்றுக் கை அவர் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கிறது.

ஏற்கனவே கடன் பிரச்சனை; புதிதாய் விசித்திரமான சிக்கல். துல்கரின் நிலைமை என்னவாகிறது என்பதெல்லாம் விறுவிறுப்பான எபிசோடுகள்…

துல்கர் சல்மானுக்கு ஆளுமையான கதாபாத்திரம். உணர்வு பூர்வமான காட்சி, ஆக்சன் அதகளம் என எனர்ஜியின் லெவல் எங்குமே குறையாமல் நடித்து, ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடியிருக்கிறார்.

துல்கரின் காதலியாக கயாது லோகரின் இயல்பான நடிப்பு கவர்கிறது.

ஹீரோவுக்கு சமமான கேரக்டரில் ஆண்டனி வர்கீஸ் ஆக்சன் காட்சிகளில் அசத்த, வில்லனாக இயக்குநர் மிஸ்கின் கவனம் பெற, சம்யுக்தா விஸ்வநாதன், மதயானைக் கூட்டம் கதிர் உள்ளிட்டோர் கதையின் முக்கியப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி பரபரப்பு. அதற்கு வேகம் தரும்படி பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய்.

ஒவ்வொரு அம்சமாக குறிப்பிட்டு சொல்லலாம். அந்தளவுக்கு வைத்திருக்கும் ஃபிரேம்களில் ஒளியுணர்வில் காட்சிகளை மெருகேற்றி படத்தின் தரம் உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஸி காலித்.

லாஜிக் என்றால் என்னவென்று கேட்கும்படியான சிலபல சீன்கள் பொறுமையிழக்கச் செய்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகனை அமரச் செய்யும்படி இயக்குநர் நயாஸ் ஹிதாயத் அமைத்திருக்கும் ஸ்க்ரீன்பிளே படத்தின் பலம்.

Rating 3 / 5 

Latest articles

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்; அது நடந்திருக்கிறது! – ‘மொத ராத்திரி’ பட வெற்றி விழா நிகழ்வில் இயக்குநர் ராஜா...

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மொத...

ரஷ்யா – உக்ரைன் போர் பின்னணியில் மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா.

ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்....

More like this