HomeGeneralமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவிதேஜா நடிக்கும் 'இருமுடி கட்டு.' தந்தை – மகள் பாசம்,...

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவிதேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு.’ தந்தை – மகள் பாசம், ஆன்மிகம் கலந்து மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது.

Published on

‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ படத்தைத் தயாரித்துள்ளது.

பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான ரவி தேஜாவை இந்த க்ளிப்ம்ஸில் காண முடிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், ‘இருமுடி கட்டு’ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் கலாச்சார வேர்களும் ஆன்மிக அம்சங்களும் இந்த திரைப்படப் பயணத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன.

விஷுவல் கிளிம்ப்ஸ் மற்றும் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பும் படத்தின் மையக்கருவை தெளிவாக பிரதிபலிக்கிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அந்த வகையில், இந்தத் தலைப்பு பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது.

இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது. இது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

படத்தில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Latest articles

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின்...

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

More like this