HomeCinemaவெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க வேண்டும்! -ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி படத்தில் காவல்துறை அதிகாரியாக...

வெற்றிமாறன், மாரி செல்வராஜ் படங்களில் நடிக்க வேண்டும்! -ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா கே எஸ் பேட்டி  

Published on

நடிகை ஐஸ்வர்யா கே எஸ், சமீபத்தில் வெளியான ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சிறுவயது முதலே நடனம் கற்றுக் கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா கே எஸ், விளையாட்டிலும் தன் திறமையை நிரூபித்தவர். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்த அவர், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ளார். இந்த விளையாட்டு பின்னணியே, அவரது திரை நடிப்பில் காணப்படும் தன்னம்பிக்கை மற்றும் உறுதியான உடல் மொழிக்கு காரணமாக அமைந்துள்ளது.

கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தற்போதைய தமிழ்ப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் நட்டி நட்ராஜ் ஜோடியாக ஒரு புதிய தமிழ் படத்தில் ஐஸ்வர்யா KS நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது திரையுலகப் பயணம் குறித்து பேசும் ஐஸ்வர்யா கே எஸ் “சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை.

இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் என்னை ஈர்த்துள்ளது. அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அதே நேரத்தில், புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ மூலம் கிடைத்த அங்கீகாரம், நடிகை ஐஸ்வர்யாவின் திரையுலகப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, தெளிவான கனவுகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சி இவை அனைத்தும், அவரை அடுத்த கட்ட உயரத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பிருக்கிறது.

 

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...