ரஞ்சித், மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள ‘இறுதி முயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
வரம் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தினை இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பை பெற்று வந்தனர்.
சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கதைக்களம் உருவாகியுள்ளது..
விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகவிருக்கிறது.
படக்குழு:- எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர், கலை பாபு எம் பிரபாகர், பாடலாசிரியர் மஷீக் ரஹ்மான், பாடகர் அரவிந்த் கார்ணீஸ் , ஸ்டில்ஸ் மணிவண்ணன், டிசைன் ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு வேலு..

