HomeCinemaஏகன் நடிக்க விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஏகன் நடிக்க விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

Published on

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிற, ஏகன் நடித்துவரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

இந்த படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்குகிறார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் காட்சியமைப்பு படத்தின் ஆன்மாவையும் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பார்ட்னர்ஸ் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் விஷன் சினிமா ஹவுஸ், ’ஹைக்கூ’ படம் குறித்தான அடுத்தடுத்த தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறது.

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர். டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் ’ஹைக்கூ’ திரைப்படத்தை தயாரிக்கின்றனர். படக்குழுவின் அர்ப்பணிப்பும் படத்தின் தரமும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Latest articles

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் வழங்கும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’...

‘டோரதி’ நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது! – நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம்...

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4′ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன்...

என்னிடம் ஈகோ இருந்தது; இயக்குநரிடம் என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று சொன்னேன்! -கில்ட் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கஸ்தூரி ராஜா பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம்...

More like this