HomeCinemaஹாட் ஸ்பாட் 2much சினிமா விமர்சனம்

ஹாட் ஸ்பாட் 2much சினிமா விமர்சனம்

Published on

இன்றைய உலகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். அதனால் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதையும் பிரதிபலிக்க வேண்டும். கருத்தாக மட்டுமே சொன்னால் போரடித்துவிடும். அதனால் காமெடி கலாட்டாக்களுடன், கமர்சியல் அம்சங்களை சேர்க்க வேண்டும். காட்டியிருக்கிறார், சேர்த்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

தான் விரும்பும் ஹீரோக்களுக்காக என்னவெல்லாமோ செய்யும் ரசிகர்களை, அதெல்லாம் தவறு. சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள். எந்த ஹீரோவும் உங்களின் பிரச்சனைக்கு உதவ ஓடி வர மாட்டான். ஆகவே உங்களின் வேலையில் கவனம் செலுத்துங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள் என அடித்துச் சொல்லும் முதல் கதைக்கு எம் எஸ் பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், விஜய் டிவி ரக்சன் மூவருமாக சேர்ந்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கணவன் மனைவி போல் இணைந்து வாழ்கிற காலகட்டத்திலும் எந்த இடத்துக்கு எப்படியான உடை உடுத்த வேண்டும் என்பதில் பொறுப்பு தேவை, எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் கவனம் தேவை என சமூகத்துக்கு அறிவுரை வழங்கும் இரண்டாவது கதைக்கு அப்பா கேரக்டரில் தம்பி ராமையாவும் மகள் கதாபாத்திரத்தில் சஞ்சனா திவாரியும் இணைந்து உயிரோட்டம் தந்திருக்கிறார்கள்.

2025, 2050 என இருவேறு காலகட்டம், அதில் ஒரு காதல், டைம் டிராவலில் காதலனை வந்து சேரும் காதலன் என வேகமெடுக்கும் கதைக்கு அஸ்வின்  _ பாவானிஸ்ரீ ஜோடியின் மிரட்சி ததும்பும் நடிப்பு எனர்ஜி தந்திருக்கிறது.

மூன்று வெவ்வேறு கதைகளை திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடம் சொல்கிறவராக பிரியா பவானிசங்கர். முகபாவங்களை சொல்லும் கதைகளுக்கேற்ப மாற்றும் விதமும், அதற்கான உடல்மொழியும் ரசிக்க வைக்கிறது.

லெஸ்பியன் அது இதுவென வில்லங்க விவகாரங்களும் இந்த படத்தில் உண்டு. அதை இந்த படத்தின் இயக்குநரும் எல்லாவிதத்திலும் அழகாக இருக்கிற பிரிகிடா சகாவும் நிரப்பியிருக்கிறார்கள்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என தொழில்நுட்பப் பங்களிப்புகளின் நேர்த்தியால் காட்சிகள் மெருகேறி படத்தின் தரம் கூடியிருக்கிறது.

சில காட்சிகள் கருத்துக்களின் தொகுப்பாக, அறிவுரைகளின் குடோனாக தோன்றினாலும் சினிமாவுக்கான ஃபார்முலாவில் காமெடி கலாட்டா உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களுடன் பார்க்கும்போது ஹாட் ஸ்பாட் 2much ரசிக்கத்தக்க படைப்பாகிறது!

Rating 3.5 / 5 

Latest articles

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

பாரி இளவழகன் இயக்கி, கடந்த ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படம்...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

More like this