HomeCinemaவித்தியாசமான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் காணொலி... ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much...

வித்தியாசமான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் காணொலி… ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி அறிவிப்பை வித்தியாசமான, கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், ரக்சன், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி, ‘ஆதித்யா’ கதிர், விஜய் டிவி அமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் ஆந்தாலஜி படமாக நான்கு கதைகள் இடம் பிடித்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மூன்று கதைகள் உள்ளது. முதல் பாகத்தில் ஒரு இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல் இருக்கும். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால் இதில் மூன்று வெவ்வேறான கதைகளை எதிர்பாராத மற்றும் சுவராசியமான திருப்பங்களுடன் விவரித்திருக்கிறோம்.

இந்த படத்திலும் இயக்குநராக நடித்திருக்கிறேன். ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், சமூகத்திற்கு தேவையான கருத்துகளும் சமமாக இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான கே ஜெ பாலமணிமார்பன் பேசுகையில், ”ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் வெளியானதும் படத்தைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வெளியானதும் அவை படத்தின் வெற்றிக்கு சாதகமான அம்சங்களாக மாறியது. அத்துடன் ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் பெரியவர்களுக்கான படமாக அமைந்திருந்தது. ஆனால் ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் வெகு ஜனரஞ்சகமாகவும் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் குறிப்பாக ஜென் ஜீ தலைமுறையினர் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் படமாக உருவாகி இருக்கிறது.

முதல் பாகத்தில் பேசப்பட்ட சமூகத்திற்கு அவசியமான கருத்துக்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் விவரிக்கப்பட்டிருந்தாலும் அவை ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை விட நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பிலும் , திரைக்கதையிலும் இரண்டு மடங்கு அதிகம். இதன் காரணமாகவே ‘ஹாட் ஸ்பாட் 2much’ படத்தை விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

‘ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஷ்ணு விஷால், இரண்டாம் பாகத்தின் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு அதைவிட சிறப்பாக இருக்கிறது என்றும், இதனை எங்களுடைய நிறுவனம் வழங்கும்’ என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்” என்றார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக காணொலி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை யூ. முத்தையன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகம் கவனித்திருக்கிறார். ஜனரஞ்சகமான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை KJB டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான K.J. பாலமணிமார்பன் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.‌

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....