HomeMovie Reviewஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம்

ஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று காதலர்களுக்குள் சுவாரஸ்யமான கலாட்டாக்களை நிகழ்த்தும் படம்.

கதையின் நாயகி ‘லவ் மீட்டர்’ என்ற ஒரு கருவியை உருவாக்குகிறார். அதை வைத்து ஒருவர் நிஜமாகவே காதலிக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்கிறார். ஒரு சிலரை வைத்து கருவியை சோதனை செய்தும் பார்க்கிறார். அதன்மூலம் கருவி சரியாக செயல்படுவது உறுதியாகிறது. ஒரு கட்டத்தில் அந்த கருவியை வைத்து தன்னையே சோதிக்க வேண்டிய நிலை. அதன் பிறகு நடப்பதெல்லாம் அதிரிபுதிரி சம்பவங்கள்தான், எதிர்பாராத திருப்பங்கள்தான். அறிவியல் கண்டுபிடிப்புகளில் விபரீதங்களும் உண்டு என்பதற்கேற்பவும் காட்சிகள் உண்டு…

நாயகி பாடினி குமார் செய்வது ஆரம்பத்தில் ஆர்வக் கோளாறு போல் தோன்றினாலும், போகப்போக தன் செயல்பாட்டை அர்த்தமுள்ளதாக மாற்றிவிடுகிறார். லவ் மீட்டரை வைத்து சோதித்ததன் பலனாக ஒன்றிரண்டு காதல் ஜோடிகளுக்குள் பிரேக் ஆகும்போது அவரது கண்களில் தெரிகிற உற்சாகம் ரசிக்க வைக்கிறது. அதே கருவியை தனக்கு பயன்படுத்தும்போது ஏற்படும் பதற்றம் காட்சிக்கு நல்ல பொருத்தம். பெற்றோரை பிரிந்த வலியை வெளிப்படுத்தும்போது கலங்கச் செய்கிறார்.

பாடினியின் மனதை குறும்பான செய்கைகளால் கைப்பற்றும் குரு லெஷ்மண் காமெடி களேபரத்துக்கு நல்ல பொருத்தம். உணர்வுபூர்வமாக நடிக்கவும் வருகிறது.

ஹீரோயினுக்கு தோழியாக வருபவர், ஹீரோவுக்கு நண்பனாக வருபவர் என மற்றவர்களின் நடிப்பும், மைக்கேல் ஆகாஷின் பின்னணி இசையும், ‘கூலி’ செளந்தரராஜனின் ஒளிப்பதிவும் சுவாரஸ்யமிக்க கதையோட்டத்தின் தேவையை சரியான அளவில் பூர்த்தி செய்திருக்கிறது.

இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு, சிரித்து ரசிக்கும் விதத்தில் திரைக்கதை அமைத்து நல்லதொரு பொழுதுபோக்கு படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் சதாசிவம் செந்தில்ராஜன்.

ஓடிடி தளங்களில் வித்தியாசமான கதையம்சமுள்ள சீரிஸ்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களுக்கு இந்த ‘ஹார்ட்டிலே பேட்டரி’ திருப்தி தரும்.

Rating 3.5 / 5 

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this