HomeCinemaபடத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது! - 'ஹவுஸ் மேட்ஸ்' படத்தின் ப்ரீ ரிலீஸ்...

படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது! – ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ராஜவேல் பேச்சு 

Published on

தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலரது நடிப்பில், ராஜவேல் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்.’

இந்த படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் தர்ஷன், “இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தின் ஐடியா, திரைக்கதை இதெல்லாம் சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தது. படத்தை பிரசண்ட் செய்ய ஒத்துக்கொண்டதற்கு அண்ணாவுக்கு நன்றி.

டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

இயக்குநர் ராஜவேல், ” இந்த படம் சாதாரணமாக தான் ஆரம்பித்தது. ஆனால், இவ்வளவு பெரிய மேடை இந்த படத்திற்கு அமைந்தது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் தான். முதல் படம் எடுப்பது சவாலான விஷயம். எடுத்த படத்தை வெளியிடுவது இன்னும் சவாலானது. அதை எஸ் கே புரொடக்க்ஷன் எளிமையாக செய்து கொடுத்தது. சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நான் கஷ்டப்பட்ட சமயத்தில் கூட இருந்த விஜய்க்கு நன்றி. தர்ஷன், காளி வெங்கட், வினோதினி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சின்ன சின்ன சர்ப்ரைஸ் இருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் காளி வெங்கட், “எனக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன், கலை மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு” என்றார்.

Latest articles

ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும்...

காதலும் நகைச்சுவையும் கலந்த ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ ‘ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது!

'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ 'கோயம்பத்தூர்...

‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரகனி!

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்' என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில்...

பா ஜ க எச். ராஜா – டாக்டர் எஸ். ராஜா நடிக்கும் ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது!

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’...

More like this