HomeCinemaரியோ ராஜ் - மாளவிகாவின் ஆண் பாவம் பொல்லாதது டிரெய்லர் செய்த உலக சாதனை!

ரியோ ராஜ் – மாளவிகாவின் ஆண் பாவம் பொல்லாதது டிரெய்லர் செய்த உலக சாதனை!

Published on

ரியோ ராஜ் – மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில், பிளாக்‌ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆண் பாவம் பொல்லாதது.’ இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு உலக சாதனையை புரிந்துள்ளது.

இதன் மூலம் , ‘உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர்’ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது.

இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு எக்ஸெல் கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது.

“மாணவர்களின் உற்சாகமும் , ஊக்குவிப்பும் தான் இந்த உலக சாதனையை சாத்தியப்படுத்தியிருக்கிறது, குழுவிற்கு வாழ்த்துகள்” என சாதனை கேடையத்தை வழங்கிப் பேசினார், உலக சாதனை இயக்ககத்தின் அதிகாரி Ms.Alice Raynaud …

“படம் பெரும்பாலும் மக்களோடு ஒன்றிப்போகும் என்பதாலேயே , இதை மக்களை வைத்தே ரிலீஸ் செய்ய முடிவெடுத்தோம் .. இந்த உலக சாதனையை பெருவெற்றியாக்கிய , எக்ஸெல் நிறுவனத்திற்கும் மாணவர்களுக்கும் நன்றிகள் என மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார் , திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி சக்திவேல் அவர்கள் …

“இது எனது ஊர் .. நான் வளர்ந்த ஊரில் இவ்வளவு பிரம்மாண்டமாய் என் படத்தின் ஒரு நிகழ்வு நடந்தேறும் என ஒரு போதும் நான் எண்ணியதில்லை , ஆனால் அதற்காக உழைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் “ என படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ் நெகிழ்ந்து பேசினார்.

“இங்கிருந்து சினிமாவில் ஜொலிக்கும் ஒரு குழுவிற்கு , இந்த மண்ணில் இப்படி ஒரு விழா எடுப்பது எங்களுக்கே பெருமை” என சிலாகித்தார் எக்ஸெல் கல்லூரி நிர்வாக இயக்குனர் திரு.மதன்.

இணை தயாரிப்பாளர் விஜயன் , கதாநாயகி மாளவிகா மனோஜ், நடிகர் விக்னேஷ்காந்த் , இயக்குனர் கலையரசன் , டிரம்ஸ்டிக்ஸ் மணிகண்டன் , விவேக் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சாதனைப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் , அக்டோபர் 31 முதல் உலகெங்கிலும் வெளியாகிறது.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this