HomeCinemaரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி!

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி!

Published on

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி.

ரஜினியுடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை புரிந்து, தமிழ் சினிமாவின் வரலாற்றில் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையான படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது . இது ரஜினியின் உலகளாவிய பிரபலத்தையும், லோகேஷின் மாஸ் இயக்கமும், சன் பிக்சர்ஸின் ப்ரொடக்‌ஷன் வெல்யூவும் சேர்ந்து உருவாக்கிய மாபெரும் வரவேற்பைக் காட்டுகிறது.

சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை ஆதரிக்கிறது. உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும்.

கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது. கூலி என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல ஒரு சகாப்தமாக உருவாகி வருகிறது.

இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களுக்கான உலகளாவிய கொண்டாட்டமாக இருக்க போகிறது .

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this