HomeCinemaஆபாவாணன் படங்கள் இம்பாக்ட் கிரியேட் செய்வதைப் போல இந்த படமும் உருவாகியுள்ளது! --'ஜென்டில்வுமன்' படத்தின் டிரெய்லர்...

ஆபாவாணன் படங்கள் இம்பாக்ட் கிரியேட் செய்வதைப் போல இந்த படமும் உருவாகியுள்ளது! –‘ஜென்டில்வுமன்’ படத்தின் டிரெய்லர் வெள்யீட்டு விழாவில் நடிகர் ஹரி கிருஷ்ணன்

Published on

லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தின் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும் அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜென்டில்வுமன்.’

வரும் மார்ச் 7-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன், சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது.

சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார்.

ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார்.

லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகை லிஜோமோல் ஜோஷ், ”ஜென்டில்வுமன் டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக இப்படம் இருக்கும், இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஜோஷ்வாவிற்கு நன்றி. யுகபாரதி அண்ணாவிற்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் கோ ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிக ஆதரவாக இருந்தார்கள். இந்த அற்புதமான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. 19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை. இதைச் சாதித்த படக்குழுவினருக்கு நன்றி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ஹரி கிருஷ்ணன், ”என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார், அந்த படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் இயக்குநர் ஜோஷ்வாவை பார்க்கிறேன். இந்த மாதிரி கதைகள் கண்டிப்பாகத் திரையில் பேசப்பட வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் த செ ஞானவேல், இயக்குநர் ராஜு முருகன், இயக்குநர் லெனின் பாரதி,
ஆர்ட் டைரக்டர் அமரன், உத்ரா புரடக்சன்ஸ் ஹரி உத்ரா,
ஒளிப்பதிவாளர் காத்தவராயன், எடிட்டர் இளையராஜா சேகர், நடிகை தாரணி உள்ளிடோரும் நிகழ்வில் கலந்து கொண்டு படம் பற்றி பேசினார்கள்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this