HomeCinemaதுல்கர் சல்மான் வெளியிட்ட, பிருத்விராஜ் சுகுமாரனின் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ வெளியீடு!

துல்கர் சல்மான் வெளியிட்ட, பிருத்விராஜ் சுகுமாரனின் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ வெளியீடு!

Published on

பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நடிகர் பிரபாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் நடிகர் ரன்வீர் சிங் ‘தி லுக் பிஃபோர்’ என இரண்டாவது பார்வை போஸ்டரையும் பகிர்ந்த நிலையில், இப்போது நடிகர் துல்கர் சல்மான், பிருத்விராஜின் படத்தில் இருந்து ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தீவிரமான போஸ்டர்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த தோற்றம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிருத்விராஜின் ’தி கோட் லைஃப்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் புத்துணர்ச்சியூட்டுவதாகவும், பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும் வசீகரம் நிறைந்ததாகவும் உள்ளது.

விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this