HomeMovie Reviewஃபோர்த் ஃப்ளோர் சினிமா விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் சினிமா விமர்சனம்

Published on

ஓரு விதத்தில் கிரைம் திரில்லராகவும் இன்னொரு விதத்தில் ஹாரர் திரில்லராகவும் வித்தியாச அனுபவம் தருகிற ‘ஃபோர்த் ஃப்ளோர்.’

நான்கைந்து வ்ருடங்கள் முன் தன்னைப் பிரிந்த மனைவிக்கு ஆபத்து என்ற சூழ்நிலையில், அவரைத் தேடி ஒரு அபார்ட்மெண்டுக்கு போகிறார் இந்த கதையின் நாயகன் தீரன். அங்கு சென்று தங்கியதிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் சிலர் தற்கொலை செய்து மரணமடைவது போன்ற கனவு வருகிறது. அப்படி கனவில் மரணமடைந்தவர்கள் நிஜத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது திரைக்கதை நமக்குத் தருகிற அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிற தீரன், அதே அபார்ட்மெண்டில் வசித்து வந்த தன் மனைவியைக் காணவில்லை என்கிறபோது என்ன செய்கிறார்? நடந்த சம்பவங்கள் அவருக்கு கனவாக வருவதன் பின்னணி என்ன? அவரது மனைவிக்கு என்னவானது? கொலைகள் யாரால், எதற்காக நடந்தன?

இந்த எல்லா கேள்விகளுக்கும் இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டியின் திரைக்கதையில் பதில் கிடைக்கிறது.

மனம் முழுக்க குழப்பம், உடல் முழுக்க பதற்றம், தன்னுடன் லிவின் ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்த பெண் மீது நேசம், அந்த உறவில் பிறந்த மகள் மீது பாசம் என கலவையான உணர்வுகளை கச்சிதமாக தந்திருக்கிறார் தீரனான வருகிற ஆரி ஆர்ஜுனன்.

அவருடன் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருக்கிற பவித்ரா, ஆரியின் சிநேகிதியாக வருகிற தீப்ஷிகா, வில்லனாக இயக்குநர் சுப்ரமணிய சிவா என மற்றவர்களிடமிருந்து அவரவர் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது.

ஜே.லக்‌ஷ்மனனின் ஒளிப்பதிவும், தரண்குமாரின் பின்னணி இசையும் ஹாரர், கிரைம் திரில்லர் என கலந்துகட்டிய கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

அப்பார்ட்மென்ட், ஃபோர்த் ஃப்ளோர், அதில் அமானுஷ்ய நடவடிக்கைகள், அதிரடி திருப்பங்கள், எமோஷ்னல் எபிசோடுகள் என கதைக்களத்தை வித்தியாசமாக யோசித்த இயக்குநர் எல் ஆர் சுந்தரபாண்டி, திரைக்கதை கட்டமைப்பை இன்னும் பலமாக்கியிருக்கலாம்.

Rating 3 / 5

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this