HomeMovie Reviewஃபைண்டர் சினிமா விமர்சனம்

ஃபைண்டர் சினிமா விமர்சனம்

Published on

சூழ்நிலைக் கைதிகளை மையமாக வைத்து, கொலைக் குற்றப் பின்னணியில் பரபரப்பான திரில்லராக ‘ஃபைண்டர்.’

பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலையை செய்ததாக ஏற்றுக் கொண்டு சிறை தண்டனை அனுபவிக்கிறார் மீன் பிடி தொழிலாளியான சார்லி. ஆறே மாதத்தில் அவரை சிறையிலிருந்து விடுவிப்பதாக சொன்னவர், பின்னர் அப்படி விடுவிப்பது சிரமம் என்று கைவிரித்து விட, ஆசைப்பட்ட பணமும் கிடைக்காமல் போகிறது. சார்லியின் மனைவி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ள, அவர்களின் மகள் ஆதரவின்றி தவிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

இன்னொரு பக்கம் கிரிமினாலஜி படித்த இளைஞர் வினோத் ராஜேந்திரன், செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிப்பவர்களை மீட்டெடுக்க தன் தோழியுடன் இணைந்து டிடெக்டிவ் ஏஜென்ஸி மாதிரியான அமைப்பு தொடங்குகிறார். அவர், நிரபராதியான சார்லியை மீட்கும் முயற்சியில் இறங்க, அதில் வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே கதை…

பரிதாபப்பட்ட அப்பாவி கதாபாத்திரத்தை சார்லியை நம்பி கொடுத்துவிட்டால் போதும். அதற்கு எப்படியெல்லாம் உயிரூட்ட முடியுமோ அப்படியெல்லாம் உயிரூட்டிவிடுவார். அதை இந்த படத்திலும் மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.

சார்லி எந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குச் சென்றாரோ, அந்த வழக்கை ஏழெட்டு வருடங்கள் கழித்து தோண்டித் துருவி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் துடிப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன். படத்தை இயக்கியிருப்பதும் அவரே. அவருக்கு தோழியாக வருபவரின் அலட்டலில்லாத நடிப்பு ஈர்க்கிறது.

அரசுத் தரப்பின் சீனியர் லாயராக வருகிற நிழல்கள் ரவி ஆளுமையாக வெளிப்பட, செய்யாத குற்றங்களை ஏற்று சிறை தண்டனை அனுபவிப்பதை தொழிலாக செய்கிற சென்றாயன், சார்லியின் மகளாக வருகிற பிரணா, வில்லனாக வருகிற நாசர் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.

பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு, சூரிய பிரசாத்தின் பின்னணி இசை, கதையின் தன்மையுணர்ந்த தமிழ்க் குமரனின் படத்தொகுப்பு என அனைத்தும் கதைக்களத்தை கனமாக்க,

நடந்த கொலை, அதற்கான காரணம், காரணமானவர்களை கண்டறிதல் என நீளும் திரைக்கதையில் வரிசைகட்டும் திருப்பங்கள் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன.

முதன்மை பாத்திரங்களில் பரிச்சயமான முகங்கள் நடித்திருந்தால் படம் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

குறைகள் சில இருந்தாலும் சற்றே புதிய கதையை, முடிந்தவரை தொய்வில்லாமல் படமாக்கியிருப்பதால் ஃபைண்டருக்கு வியூவர்ஸ் அதிகரிப்பது உறுதி!

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...
சூழ்நிலைக் கைதிகளை மையமாக வைத்து, கொலைக் குற்றப் பின்னணியில் பரபரப்பான திரில்லராக 'ஃபைண்டர்.' பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலையை செய்ததாக ஏற்றுக் கொண்டு சிறை தண்டனை அனுபவிக்கிறார் மீன் பிடி தொழிலாளியான சார்லி. ஆறே மாதத்தில் அவரை சிறையிலிருந்து விடுவிப்பதாக சொன்னவர், பின்னர் அப்படி விடுவிப்பது சிரமம் என்று கைவிரித்து விட, ஆசைப்பட்ட பணமும் கிடைக்காமல் போகிறது. சார்லியின் மனைவி மன உளைச்சலால்...ஃபைண்டர் சினிமா விமர்சனம்