HomeCinemaசாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர். 4’ தொடங்குகிறது!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர். 4’ தொடங்குகிறது!

Published on

ஃபைனலி பாரத், ஷான்வி மேக்னா நடிக்க, அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து, தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியபோது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்‌ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களைப் போலவே, ‘புரொடக்‌ஷன் நம்பர்.4’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பல நம்பிக்கைக்குரிய படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தரமான நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் படங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அந்த வகையில், இந் நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது சாந்தி டாக்கீஸ் நிறுவனம்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this