HomeCinemaஅனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Published on

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பர்தா’ திரைப்படம் திரில், பாரம்பரியம், போராட்டம் மற்றும் பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது என்பது டிரைய்லரின் முதல் காட்சியிலேயே தெளிவாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகியுள்ள படத்தின் டிரைய்லரில் பழைய மரபுகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் தங்கள் சுதந்திரத்தை எப்படி விசாலப்படுத்தினார்கள் என்பதை சொல்கிறது. கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் தனிமனிதரின் உணர்வுகளுக்கும் இடையிலான உரையாடலையும் படம் எடுத்துரைக்கிறது.

‘சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி இருக்கும் ‘பர்தா’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டாயப்பட்டுத்தப்படுகிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் விதி மாறுகிறது. சுப்புவின் வாழ்வை சுற்றி இருக்கும் ’பாரம்பரிய’ சுவர்களை உடைக்க அவர்களை உதவுகிறார்கள்.

சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையாக ‘பர்தா’ இருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக பெண்களை கட்டிவைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை ‘பர்தா’ விமர்சிக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமை, மாற்றத்திற்கான முன்னேற்றம் ஆகியவற்றையும் தைரியமாக பேசும் கதைக்களமாக ‘பர்தா’ உருவாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 22, 2025 அன்று தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ‘பர்தா’ வெளியாகிறது.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this