HomeCinemaஎம் எஸ் பாஸ்கருக்கு கனமான கதாபாத்திரம் கொடுத்து ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கும் முதல் படம் பூஜையுடன்...

எம் எஸ் பாஸ்கருக்கு கனமான கதாபாத்திரம் கொடுத்து ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கும் முதல் படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில், குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

‘பார்க்கிங் ‘ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் – இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this