HomeCinemaபிரமாண்டமாக நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநாடு; உலகநாயகனின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்ன...

பிரமாண்டமாக நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநாடு; உலகநாயகனின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்ன உதயநிதி

Published on

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகிற்கு நிவாரணமாக அமையும் என்றார்.

தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு துணை முதல்வர், கலைஞானி அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார். தவிர, பனையூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக்கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

கமல்ஹாசன் இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக தனது நன்றியை மேடையிலேயே தெரிவித்தார்.

Latest articles

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற ‘ஹாஃப்’

சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க...

’விட்ரா மச்சா…’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!

தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும்...

More like this